அர்ஜுன் ரெட்டி நாயகியின் அடுத்த தமிழ் படம்

அர்ஜுன் ரெட்டி நாயகியின் அடுத்த தமிழ் படம்

கடந்த கால தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா போன்ற திரையுலகில் முக்கிய பிரபல நடிகை சாவித்ரி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மகாநதி என்ற தலைப்பில் திரைப்படம் உருவதாக தகவல்கள் முன்பே வந்திருந்தது. இப்படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், சமந்தா மற்றும் சிலர் நடிக்கிறார்கள்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் எடுக்கப்பட உள்ள இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் எடுக்கவுள்ளனர். வயியந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டானி சஞ்செஸ் -லோபெஸ் ஒளிப்பதிவாளராகவும், மைக்கெல் ஜே மேயர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்த படம் குறித்து தற்பொழுது கிடைத்த தகவலின் படி, தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் கதாநாயகி ஷாலினி பாண்டேயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கயிருக்கிறாராம். மேலும் ஜி.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக முதல் முறையாக தமிழ் திரையுலகில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ‘ஷாலினி பாண்டே’யின் இரண்டாவது தமிழ் படம் ‘மகாநதி’ என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா நடிப்பில் உருவாகும் பரமபதம்

Sivakarthikeyan Honored Sivaji Statue In Adaiyar Memorial

அர்ஜுன் ரெட்டி நாயகியின் அடுத்த தமிழ் படம்

Priya

She is a student who love interacting with people and learning new languages. Also interested in Psychology, reading books and playing badminton.