சக்க போடு போடு ராஜா ட்ரைலர்

சக்க போடு போடு ராஜா ட்ரைலர்

சந்தானம் நடித்து வெளிவர உள்ள ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ போன்ற படங்களுக்கிடையில், ‘சக்க போடு போடு ராஜா’ படமும் வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் வெளிவர உள்ள இப்படத்தின் ட்ரைலர் வருகிற 14ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சேதுராமன் இயக்கிய இப்படத்தினை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். மராத்தி, அரபி போன்ற மொழிகளில் நடித்த வைபவி சாண்டில்யா சந்தானத்திற்கு இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சிம்பு பணிபுரிந்துள்ளார். மேலும் சிம்பு மற்றும் அனிருத் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் இணைந்து ‘கலக்கு மச்சான்’ என தொடரும் பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.

இப்படத்தில் பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி போன்றவர்கள் முதல் முறையாக ஒன்றிணைந்தது மற்றுமிற்றி சந்தானத்துடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள்.

Santhanam’s Sakka Podu Podu Raja Next Single Promo Video

Jio Launches New Diwali Offer – 100% Cash Back

Sivakarthikeyan Honored Sivaji Statue In Adaiyar Memorial

சக்க போடு போடு ராஜா ட்ரைலர்

Sarav

Sarav, an Engineering graduate who is learning more about social activities has passion in Tamil and English writings too. More interested in Tamil literature and Movies.