மீண்டும் திரைக்கு வருகிறது நகுல் படம்

மீண்டும் திரைக்கு வருகிறது நகுல் படம்

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை மற்றும் சில படங்களில் நடித்த நகுலின் நாரதன் படம் சென்ற வருடம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

இப்பொழுது அறிமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கியுள்ள செய் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை ஏஞ்சல் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற படங்களின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஜய் உலகநாதன் இப்படத்திலும் ஒளிப்பதிவு பணியை செய்திருக்கிறார். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்திற்கு, நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், படத்தினை வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் சென்னை சிட்டி உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் வருகிற நவம்பர் 10 அல்லது 17ம் தேதி படத்தினை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதை தவிர விஜய் குமார் இயக்கி வரும் ‘ப்ரம்மா.காம்’ என்ற படத்திலும் நகுல் நடித்து வருகிறார். இதில் சித்தார்த் விபின் மற்றும் ஆஷ்னா சவேரி நடிக்கின்றார்கள்.

விஜய் சேதுபதி மாறுபட்ட வேடங்களில் – ONNPS New Stills

மீண்டும் திரைக்கு வருகிறது நகுல் படம்

Mani

Mani has written many short stories to local publications and 3 years of successful writer in different categories.