ஸ்பைடர் இசை வெளியிட்டு விழா ரஜினி, கமல் வருகை

ஸ்பைடர் இசை வெளியிட்டு விழா ரஜினி, கமல் வருகை

ஸ்பைடர் படம் செப்டம்பர் 27ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தின் தமிழ் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலும், அவர் நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் ‘ஸ்பைடர்’. இப்படத்தின் மூலம் நடிகர் மகேஷ் பாபு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் படுத்தப்படுகிறார்.

இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிப்பதும், கமலின் ‘மருதநாயகம்’ படத்தைத் தயாரிக்க இருப்பதும் லைகா நிறுவனம்தான்.

ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ளையுள்ளனர் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறன்றன.

இதன் மூலம் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணைந்து இருப்பது மக்களின் ஆர்வத்தினை இன்னும் தூண்டியுள்ளது. சூர்யா, இயக்குனர் ஷங்கர் மற்றும் பல பரபலங்கள் கலைந்து கொள்வதாக கூறப்படுகிறன்றது.

ஸ்பைடர் என்னும் படத்தினை இயக்கியவர் முருகதாஸ். இவர் கத்தி, துப்பாக்க என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கதாநாயகன். ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி உள்பட பலர் நடிதுள்ளனர். மேலும் இப்படத்தில் பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.

Neruppu Da Gets Positive Reviews

காளி படத்தில் புதிய கதாநாயகி சேர்க்கை

ஸ்பைடர் இசை வெளியிட்டு விழா ரஜினி, கமல் வருகை

 

Mani

Mani has written many short stories to local publications and 3 years of successful writer in different categories.